×

நியூசிலாந்து அபார வெற்றி

இங்கிலாந்து அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. கார்டிப், சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த இப்போட்டியில், முதலில் பேட் செய்த இங்கிலாந்து 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 291 ரன் குவித்தது (ஹாரி புரூக் 25, டேவிட் மலான் 54, பென் ஸ்டோக்ஸ் 52, லிவிங்ஸ்டன் 52, கேப்டன் பட்லர் 72 ரன்).

அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து 45.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 297 ரன் எடுத்து வென்றது. வில் யங் 29, ஹென்றி நிகோல்ஸ் 26 ரன்னில் வெளியேறினர். டெவன் கான்வே 111 ரன் (121 பந்து, 13 பவுண்டரி, 1 சிக்சர்), டேரில் மிட்செல் 118 ரன்னுடன் (91 பந்து, 7 பவுண்டரி, 7 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். கான்வே ஆட்ட நாயகன் விருது பெற்றார். 4 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி சவுத்தாம்ப்டனில் இன்று நடக்கிறது.

The post நியூசிலாந்து அபார வெற்றி appeared first on Dinakaran.

Tags : New Zealand ,England ,Sophia Gardens ,Cardiff ,Dinakaran ,
× RELATED 2-2 என தொடரை சமன் செய்தது பாக்.